முக்கிய செய்திகள்

வாய்வு பிரச்சனை ஏற்பட காரணம்!

849

நம் உடலில் முக்கியமாக நமது வயிற்றில் கேஸ் என அழைக்கப்படும் வாய்வு சேர்வதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

உண்ணும் உணவில் உள்ள சில ஜீரணமாகாத வாய்வுதான் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பையை உண்டாக்குகிறது. மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், வயிற்றில் வாய்வு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால், நாம் முயன்றால் அதை சுலபமாக போக்க முடியும்…

எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உண்டு வந்தாலே இந்த வாய்பு பிரச்சனை என்பது அறவே வராது. எனவே, துரித உணவுகள், பரோட்டா உள்ளிட கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், சிலர் ஒரு நாளைக்கு அதிகமான பழச்சாறு மற்றும் குளிர்பானங்களை குடிப்பதாலும் உடலில் கேஸ் சேரும். எனவே, அதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல், அவசர அவசரமாக சாப்பிடும் போதும், பேசிக் கொண்டே சாப்பிடும் போதும், காபி,டி உள்ளிட்ட பானங்களை குடிக்கும் போது நம்மை அறியாமலே காற்றை விழுங்கி விடுகிறோம். இப்படியும் நம் உடலுக்குள் வாய்வு செல்கிறது. ஆனால் அந்த வாய்வு ஏப்பம் மூலமாகவுவும், ஆசன வாய்வு மூலமாகவும் வெளியேறும். ஆனால், உடலியேயே தங்கி விட்டால் அது வாயு பிடிப்பாக மாறிவிடும்.

வாயுவை கட்டுப்படுத்த எண்ணெய் உள்ள உணவு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆவியில் வெந்த உணவுகளை உண்ண வேண்டும். தினமும் நடைபயிற்சி, நாளொக்கொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் மற்றும் வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா, மது, புகைப்பழக்கம் ஆகியவற்றை தவிர்த்தாலே வாயு நம்மை தொந்தரவு செய்யாது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *