முக்கிய செய்திகள்

விக்கிலீக்ஸ் தலைவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்ததான உத்தரவு நாளை

38

விக்கிலீக்ஸ் தலைவரான ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்ததான உத்தரவு நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே எதிர்கொண்டார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகம், கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சுக்கு 2012ஆம் ஆண்டு அடைக்கலம் அளித்தது.

எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் திகதி அவருக்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதையடுத்து, ஈகுவடோர் தூதரகத்திற்குள்ளே சென்று பிரித்தானிய காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நாளை குறித்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் காலை 10 மணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளர் பிரிதி படேல் இறுதி முடிவை எடுப்பார் என கூறப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *