விக்னேஸ்வரன் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்

393

இனியும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனக்குழப்பத்தில் இருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தை நீக்கி சரியான பதில் ஒன்றை தெரிவிப்பாராக இருந்தால், அதன் பின்னர் அடுத்த மாகாணசபை தேர்தல் குறித்து கூட்டமைப்பு விரைவில் வெளிப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தல்கள் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என்று கேட்ட முதலமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் வீட்டை விட்டு வெளியேறி வாக்களியுங்கள் என்று கூறியவர் எனவும், இவ்வாறான நிலையில் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *