இந்தியாவில் நிதிமோசடி வழக்கில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரும் வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதம் 12ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டால் அங்கு அடைக்கப்படவுள்ள சிறையின் அமைப்பை காணொளியில் காண்பிக்குமாறு, வழக்கு விசாரணையில் முன்னிலையான இந்திய அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் மல்லையா, தங்களிடமிருந்து பெற்ற சுமார் 750 மில்லியன் பவுண்டுகள் கடனை திரும்ப அளிக்கவில்லை என்று இந்திய வங்கிகள் குற்றச்சாட்ட்டியுள்ளன.
இந்த நிலையில் பிரித்தானியாவில் தங்கியுள்ள அவர் மீது இந்திய அரசாங்கம் பிரித்ததானியாவில் வழக்குத் தொடர்ந்து நடாத்தி வருகின்றது.
இந்தியாவிலுள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் நடந்துவரும் நிலையில், அவரை பிரித்தானியாவிலிருந்து இந்தியா கொண்டுவருவதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.