விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற கனடிய அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

117

கனடாவிற்கு வெளியில் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்ற அரசியல்வாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

ஒன்ராரியோ அல்பேர்ட்டாவைத் தொடர்ந்து மனிடோபா, சஸ்காட்செவன் மற்றும் கியூபெக் பகுதிகளைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு விடுமுறைக்காகச் சென்றமை உறுதியாகியுள்ளது.

மனிடோபாவின் என்.டி.பி.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிகி ஆஷ்டன் (Niki Ashton) கியூபெக்கின் லிபரல்  கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பியர் ஆர்கண்ட் (Pierre Arcand) மற்றும் சஸ்காட்செவன் சட்டமன்ற உறுப்பினர் ஜோ ஹர்கிரேவ் (Joe Hargrave) ஆகியோர் விடுமுறைக்காக வெளிநாடு சென்றமை உறுதியாகியுள்ளது.

முதலில் ஒன்ராரியோவின் நிதி அமைச்சர் ரொட் பிலிப்ஸ் கரீபியன் தீவுகளுக்கு சென்றமை கண்டறியப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அல்பேர்ட்டாவின் நகராட்சி விவகார அமைச்சர் ட்ரேசி அலார்ட் (Tracy Alert) ஹவாய்க்கும் சட்டமன்ற உறுப்பினர் களான பாட் ரெஹ்ன் (Pat Rehn)

தன்யா ஃபிர் (Tanya Fir) மற்றும் ஜெர்மி நிக்சன் (Jeremy Nixon) ஆகியோர் வெளிநாட்டிற்கு சென்றமை உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *