முக்கிய செய்திகள்

விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு ரஷ்யா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது

1106

விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரப்பின் அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள ரஷ்யா, பூமிக்கு வெளியேவும் ஆயுதங்களை கொண்டு வராதீர்கள் என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் விண்வெளி படை என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அதற்கான, பணிகளை மேற்கொள்ளுமாறும் அந்ரத நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் விண்வெளியில் ரஷியா, சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்றும் தமது நாட்டின் பாதுகாப்புத் துறையிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையிலேயே டிரம்ப்பின் இந்த விண்வெளிப்படை அறிவிப்புக்கு ரஷ்யா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஷஹரோவா, இந்த அறிவிப்பானது விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், ஆனால், இது ஆபத்தான ஒன்று எனவும் விபரித்துள்ளார்.

விண்வெளியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வளர்ப்பது சரியானதாக இருக்காது என்றும், அமைதியின் நோக்கத்தை சிதைப்பதாக இது அமையும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *