கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில், வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் இரண்டு முகவர்கள் கலந்து கொண்டனர் என்று, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இதுகுறித்து தகவல் வெளியிடுகையில்,
“அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னணியில், இரண்டு மருத்துவர்கள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளிடம் சம்பளம் பெறும் முகவர்கள்.
தேவையானால் வருங்காலத்தில் இவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியும்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் செயற்பாடுகளை விமர்சித்து விட்டு அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்கின்ற தார்மீக உரிமை அவருக்கு உள்ளதா? எனவும் ரேணுக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பொதுஜன பெரமுன தலைமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்ற தமது கருத்தை விமல் வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.