புதுடில்லியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப் போவதாக விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுக்களில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நாளை விவசாயிகள் ஒரு லட்சம் உழவு இயந்திரங்களில், டில்லியில் பேரணியை நடத்தவுள்ளனர்.
அதேவேளை பெப்ரவரி 1ஆம் நாள் டில்லியின் பல்வேறு இடங்களில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி கால்நடையாக பேரணி நடத்தப் போவதாகவும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.