முக்கிய செய்திகள்

வீடற்றவர்களின் பிரச்சினைகள் பூதாகாரமாக உருவாகியுள்ளதாகவும் இதனால் அவசரகாலநிலை பிரகடனம் செய்ய வேண்டுமெனவம் ரொறன்டொவின் மாநகரசபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

314

வீடற்றவர்களின் பிரச்சினைகள் பூதாகாரமாக உருவாகியுள்ளதாகவும் இதனால் அவசரகாலநிலை பிரகடனம் செய்ய வேண்டுமெனவம் ரொறன்டொவின் மாநகரசபை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
ரொறண்டோவில் வீடற்றவர்களினால் எதிர்நோக்கப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவசரகாலநிலை அறிவிக்கப்பட வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் எனவும், இதில் அவசர செயற்திட்ட பொறிமுறைமையொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
வீடற்றவர்களின் பிரச்சினையினால் ஆபத்தான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நகரசபையின் உறுப்பினர் முசளைவலn றுழபெ-வுயஅ தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் 2018ம் ஆண்டு ஜூன் திங்கள் வரையில் வீடற்ற நிலைமையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *