முக்கிய செய்திகள்

வீடு தேடி வந்து மரக்கன்று தருவோம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

1618

சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

எனவே புதிய மரங்களை நடவேண்டும் என்பதில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அக்கறை காட்டியுள்ளார். இதற்காக இலவச மரக்கன்றுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லாமல் அனைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இந்த வேளையில் சென்னையில் வார்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விட்டன.

அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார்.

தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப்படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து இலவச மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *