முக்கிய செய்திகள்

வீட்டில் தனித்திருந்த குடும்பத் தலைவர் ஒருவர் வெட்டிக் கொலை

50

யாழ்ப்பாணம் – புத்தூர், வீரவாணி பகுதியில், வீட்டில் தனித்திருந்த குடும்பத் தலைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1 மணியளவில், வீட்டுக்கு அருகில், இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

7 பிள்ளைகளின் தந்தையான, 52 வயதுடைய, துரைராசா சந்திரகோபால் என்பவரே, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று, அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய பகைமையின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், 4 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *