விவசாயிகளுடன் இணைந்து போராடுவதற்குத் திட்டமிட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசாங்கத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்திருந்தார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை விட்டு வெளியே செல்ல டெல்லி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ‘‘ இன்று நான் ஒரு சாதாரண மனிதராக சென்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க இருந்தேன்.
அவர்கள் எனது திட்டத்தை தெரிந்து கொண்டு, என்னை செல்ல விடாமல் தடுத்து விட்டனர்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.