வெனிசுவேலாவில், எரிவாயு ஆலை குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு பயங்கரவாத செயலாக கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடி விபத்தினால் இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள அதிகாரிகள், எரிவாயு குழாய் இணைப்புக்கு அருகிலுள்ள பகுதியில் வசிப்பவர்களை குறித்த இடத்தை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வெனிசுவேலாவின் பெற்றோலியத்துறை அமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், தாக்குதல் பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.