முக்கிய செய்திகள்

வெளிநாட்டு அமைப்பின் கண்காணிப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முன்னாள் கடற்படை தளபதி அதிர்ச்சித் தகவல்

96

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றதாக முன்னாள் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பிரதான நபரான சஹ்ரான் ஹாசிம் தற்கொலை குண்டுதாரிகளின் தலைவர் இல்லை எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சரியான தரப்பிற்கு புலனாய்வு செய்திகளை அனுப்பதவறியதன் காரணமாக அந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹ்ரான் ஹாசிமை கண்காணிப்பதற்கு 2004 முதல் இராணுவபுலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹ்ரானை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவபுலனாய்வு அதிகாரி பின்னர் ஐந்து வருடங்களிற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *