முக்கிய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்-2 பி விசா எண்ணிக்கையை உயர்த்தியது அமெரிக்கா

718

அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-2 பி விசாவின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உணவகங்கள், சுற்றுலா தொழில் துறையின் கீழ் இயங்கும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டவர்கள் பணியாற்ற எச்-2 பி என்ற விசாவை அந்நாட்டு அரசு வழங்கி வருகின்றது.

இந்நிலையில், இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான, குறைந்த ஊதியங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்‍கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்‍கு வழங்கப்படும் எச்-2 பி விசாக்‍களின் எண்ணிக்‍கையை மேலும் 15 ஆயிரமாக அதிகரித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்‍காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் வழக்‍கமாக எச்-2 பி விசாக்‍களின் எண்ணிக்‍கையைவிட 45 சதவீதம் அதிகம் என்று அமெரிக்‍க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்‍கான அதிகாரிகள், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடல் உணவு, சுற்றுலா மற்றும் பிற தொழில்துறைகளில் இந்த விசாவின் கீழ் பணியாற்ற முடியும். ஆனால் பண்ணைத் தொழிலாளர்களாக பணியாற்ற முடியாது என்று அந்நாட்டு அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *