ஸ்கார்பரோவில் தமிழ் சமூகத்திற்காக ஒருநாள் கொரோனா தடுப்பூசி மையம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளளது.
ஸ்கார்பரோ புரூக்சைட் பொதுப்பாடசாலையில், முற்பல் 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த மையம் செயற்படவுள்ளது.
இதன்போது 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்கார்பரோவில் வசிப்பதை அல்லது தொழில் புரிவதை உறுதி செய்வதற்கான ஆதாரத்தினை உறுதிப்படுத்தும் ஆவணத்தினை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மையத்தில் பைசர் தடுப்பூசியே அனைவருக்கும் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.