முக்கிய செய்திகள்

ஸ்டாலினும் புதல்வரும் சொத்து விபரங்களை வெளியிட்டனர்

35

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன் பிரகாரம்,ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில், ‘கையிருப்பு தொகையாக 50 ஆயிரமும், தனது மனைவி துர்காவிடம் 25 ஆயிரமும் கையிருப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

துர்காவிடம் 24 இலட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளது. .ஸ்டாலினிடம் 4 கோடியே 94 இலட்சத்து 84 ஆயிரத்து 792 மதிப்பிலான அசையும் சொத்துகளும், துர்காவிடம் 30 இலட்சத்து 52 ஆயிரத்து 854 மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன.

ஸ்டாலின் பெயரில் 2 கோடியே 24 இலட்சத்து 91 ஆயிரத்து 410 மதிப்பிலான அசையா சொத்துகளும், துர்காவிடம் ஒரு கோடியே 38 இலட்சத்து 46 ஆயிரத்து 283 மதிப்பிலான அசையா சொத்துகளும் இருக்கிறது.

உதயநிதி பெயரில் 21 கோடியே 13 இலட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபா மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபா மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளன.

உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபா மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன.

கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 இலட்சத்து 89 ஆயிரம் ரூபா என்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *