முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழகமெங்கும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

1281

தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ; கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பலரும் இணைந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் தக்கப்பட்டதை அடுத்து தமிழகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தனசட்டப்பேரவையில் திமுக சார்பில் வைக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை ஏற்கப்படாததால், தர்ணா போராட்டத்தை தொடங்கியதால், ஸ்டாலின் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆாப்பாட்டம்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சட்டப்பேரவையிலிருந்து ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் தர்ணா
இதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித சங்கிலி போராட்டம்
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல், போரட்டம், ஆர்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு ஆகிய போராட்டங்களில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மெரினாவில் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின், திமுகவினர் கைது
மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது, குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு நடைபெறும் போராட்டங்களின் தகவல்கள் வந்த வணணமுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *