ஸ்டீபன் ஹாவ்கிங்னின் சக்கர நாற்காலி மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

316

காலஞ்சென்ற இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினால் பயன்படுத்தப்பட்ட சக்கர நாற்காலி மற்றும் அவரின் முனைவர் ஆய்வுக் கட்டுரைகள் என்பன சுமார் 1 மில்லியன் பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரநாற்காலி முன்னதாக 15,000 பவுண்களாக அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இறுதி ஏலமாக 296,750 பவுண்களுக்கு விற்கப்பட்டது.

இந்த நிதி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினின் நிதியத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளதுடன், மோட்டார் நியுரோன் நோய் சங்கத்திற்கும் வழங்கப்படவுள்ளது.அத்துடன், அவரது 1965 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கழக முனைவர் ஆய்வுக் கட்டுரைகள், பிரபஞ்ச விரிவாக்கத்தின் பண்புகள் உள்ளிட்ட கட்டுரைகள் என்பன ஏல விற்பனையின் போது மிகுந்த ஆர்வத்துடன் ஏலத்தில் பெறப்பட்டுள்ளன. அதற்கான ஏலத் தொகையாக 584,750 பவுண்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுதவிர அவரின் மேலும் 20 ஆய்வுகள் சார்ந்த பொருட்கள் குறிப்பாக இயற்பியல் குறிப்புகள், சிம்ப்சன்ஸில் அவரது தோற்றங்களில் ஒன்றான கையெழுத்துப் படிவம் என்பன 6,250 பவுண்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பேராசிரியர் ஸ்டீபன் ஹாவ்கினின் பதக்கங்கள் மற்றும் விருதுகள் என்பனவும் சுமார் 296,750 பவுண்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஹாவ்கிங்கின் புதல்வி லூசி இதுபற்றி கூறுகையில், “விற்பனையாளர்களால் எனது தந்தையின் அசாதாரணமான வாழ்க்கையை ஒரு சிறிய தேர்வு வடிவமாகவும், கவர்ச்சிகரமான உருப்படிகளின் வடிவத்திலும் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *