முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது.

315

கலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றார்.

இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாu;.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில் ,இலங்கை அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது.

அதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சரவ்தேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம் இந்நிலையில் நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளார்.

மேலும் அதனை அமைக்கலாமா? இல்லையா? என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டுவர முயல்கின்றார்.ஸ்ரீலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *