முக்கிய செய்திகள்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

220

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் நேற்று ஏழாவது நாளாக நடத்திய வான் வழி தாக்குதலில், 10  சிறுவர்கள் உள்ளிட்ட 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருவாரமாக நடக்கும் மோதல்களில், ஒரே  நாளில் ஏற்பட்டுள்ள அதிக உயிரிழப்பு இதுவாகும்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும்,  பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இந்தக் கட்டடங்களில் பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

சுரங்க வலையமைப்பு ஒன்றை இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளதால், அதன் மீதிருந்த பல கட்டடங்கள் நொருங்கி தரைமட்டமாகியுள்ளன.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான யெஷியே சின்வர், அவரது சகோதரர் முகமது ஆகியோர் தங்கியிருந்த வீடும், இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் உள்ளனரா என்பது குறித்த தகவல், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில், 58 குழந்தைகள், உள்ளிட்ட, 192 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 1230 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இரு குழந்தைகள் உள்ளிட்ட 10 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண, அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *