முக்கிய செய்திகள்

ஹமில்ட்டன் தீப்பரவல் சம்பவத்தில் ஒருவர் பலி

426

ஹமில்ட்டன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Waterdown பகுதியில், John Streetஇல் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாம் மாடியில், இன்று அதிகாலை 1.40 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், குறித்த அந்த வீட்டில் தீ வெகுவாக பரவியிருந்ததாகவும், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றும் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஹமில்ட்டன் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக அந்த கட்டிடத்தில் இருந்தோர் வெளியேற்றப்பட்ட போதிலும், தீப்பரவல் கட்டுப்பாடடினுள் கொண்டுவரப்பட்டதனை அடுத்து அவர்கள் அனைவரும் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஒன்ராறியோ மாகாண தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *