ஹலிஃபெக்ஸ்(Halifax) நகரில் புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்லிருந்து நடப்புக்கு வருகிறது

415

நோவா ஸ்கொட்ஷியாவின் தலைநகரான ஹலிஃபெக்ஸ்ஸில்(Halifax) புகைப்பதை தடை செய்யும் சட்டம் இன்றிலிருந்து நடப்புக்கு வருகிறது.

கனடா முழுவதும் இன்னமும் இரண்டு நாட்களில் உடல் ஊக்கத்துக்கான கஞ்சா போதைப் பொருள் பாவனை சட்ட பூர்வமாக்கப்படவுள்ள நிலையில், தற்போது இந்த புகைத்தல் தடை நடப்புக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனைய இடங்களில் சுருட்டு உள்ளிட்ட நெருப்பில் புகையும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள மின்சுருட்டுக்களையும் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கத்தை உடையவர்களுக்கு என ஹலிஃபெக்ஸ் நகரில், குறிப்பாக பேரூந்து தரிப்பிடங்கள் உட்பட ஒன்பது இடங்களில் புகைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர, ஏனயை இடங்களில் புகைக்கும் குறறச் செயலில் ஈடுபடுவோருக்கு 25 டொலர்களில் இருந்து 2,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *