அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலையிலிருந்து வெடித்துப் பறந்த குழம்பு சுற்றுலா பயணிகளின் படகை தாக்கியதில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஹவாய் தீவில் உள்ள கிலாயூ என்ற எரிமலை கடந்த மே மாதம் வெடித்ததில் இருந்து, அது குழம்பு, புகை என்பவற்றை வெளியேறிய வண்ணம் உள்ளது.
எனினும் அனைத்துலக சுற்றுலாத் தலமான அந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்தும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய நாள் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடலில் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளை கிலாயூ எரிமலையில் இருந்து வெடித்து வெளியேறிய குழம்பும் படகு ஒன்றின் மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த படகில் இருந்த 23 பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.