முக்கிய செய்திகள்

ஹெய்டியில் (Haiti) சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலி

21

ஹெய்டியில் (Haiti) சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெய்டி தலைநகர் போர்ட்-ஒவ்-ப்ரிண்சுக்கு (Port-au-Prince) வடகிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது, கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கலவரத்தில் சிறை அதிகாரிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹைய்டி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளில் 60 பேர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *