முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு செயலர்கள் கன்னி பயணமாக ஜப்பானுக்குச் சென்றனர்

242

அமெரிக்காவின் வெளியுறவு செயலர் அண்டனி பிளிங்கன் (Antony  Blinken) மற்றும் பாதுகாப்பு செயலர் லொயிட் ஒஸ்டின் (Lloyd Austin) ஆகிய இருவரும் ஜப்பானை சென்றடைந்துள்ளனர்.

பைடனின் நிருவாகத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இவ்விருவரும் மேற்கொள்ளும் கன்னி வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அங்கு அவர்கள் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, (Toshimitsu Motegi)  பாதுகாப்பு  அமைச்சர் நோபூ கிஷி (Nobuo Kishi) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதன்போது இந்திய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவது குறித்து முக்கியமாக விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

இதேவேளை  இருதரப்பு உறவுகள் மற்றும் பல தரப்பு நிறுவனங்களில் நண்பர்கள் மற்றும் கூட்டாளார்களுடன் எங்கள் உறவுகளை புத்துயிர் பெற செய்வதற்கும் எங்கள் குறிக்கோள்கள், மதிப்புகள் மற்றும் பொறுப்புகளை மறுபரிசீலனை செய்வதற்கும் அமெரிக்கா இப்போது ஒரு பெரிய உந்துதலை செய்து வருகிறது வெளிவிவகார, பாதுகாப்பு செயலர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ‘‘அமெரிக்காவும் மற்ற நாடுகளும் ஒரு சுதந்திரமான இந்தோ- பசுபிக் பிராந்தியத்தை வைத்திருப்பதற்கான மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பகிர்ந்து கொள்கின்றன.

ஆனால் சீனா அந்த வழியை பெறுவதற்கு அனைத்து வகையிலும் வற்புறுத்தலை பயன்படுத்த தயாராக இருக்கிறது. எனவே அங்கு எங்கள் கூட்டாளிகளுடன் எவ்வாறு செயல்படுவது என்பதை நாங்கள் முக்கியமானதாக கருதுகிறோம்’’ எனவும் கூறினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *