முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆக்கிரமிப்புக்களை எதிர்ப்பதற்கு ஒற்றுமை அவசியம் என்று பேராசிரியர் சொர்ணராஜா வலியுறுத்தியுள்ளார்

645

நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவம், அதனைப் பேணிக் காக்கவேண்டும் என்றும், எமது ஒற்றுமையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும்போதுதான் எம்மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடலாம் என்றும், சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் சொர்ணராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது எமக்கு இருக்கும் அரண் பன்னாட்டுச் சட்டமே எனவும், அது எம்மைப் பாதுகாக்கும் வலிமை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வல்லரசுகள் என்றும் வல்லரசுகளாக இருந்ததில்லை என்பதுடன், பேரினவாதங்கள் எப்போதும் வலிமையாக இருந்ததில்லை எனவும், பேரினவாதம் மற்றும் வல்லரசுகளின் வலிமை குன்றும் என்பதை சரித்திரம் எடுத்துக் கூறுகின்றது என்றும் அவர் விபரித்துள்ளார்.

வெளிநாட்டு ஆட்சியாளர்கள் வந்தார்கள் சென்றார்கள் எனவும், அதேபோன்று சிங்களவர்களும் வந்துள்ளார்கள் – அவர்களும் போவார்கள் என்றும், பேரினவாதத்தின் வலிமை நிச்சயம் குன்றும் என்வும், சிங்களவர்களின் அரசியலைப் பார்த்தால் அதனை நாம் விளங்கிக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சிங்களவர்களுக்கு இடையில் உட்பூசல் வளர்ந்து வருகின்றது எனவும், மகிந்த ஆட்சிக்கு வரக் கூடாது என்று கருதும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்றும், சிங்களவர்கள் இரு பகுதியாக தாக்குதல் நடத்தும்போது சிங்களப் பேரினவாதம் அழிந்து போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களப் பேரினவாதிகள் இடையே ஊழல் அதிகமாக உள்ளது எனவும், அதனாலேயே அவர்கள் பலவீனப்படுத்தப்படுவார்கள் எனவும், எனினும் அவர்கள் பலவீனப்படுவார்கள் என்ற கருத்தை மட்டும் வைத்து நாம் இயங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எமது உரிமைகளுக்காக நாம் பேராட வேண்டும் எனவும், எமது பொருளாதாரத்தை நாமே ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் கல்வி முன்னேற்றத்தை திரும்பவும் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுடன் அதைப் பேணிக் காக்க வேண்டும் எனவும், நமது ஒற்றுமையைத் தக்கவைத்து கொள்ளும்போதுதான் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடலாம் எனவும், தமிழ் மக்கள் அல்லல் பட்டு இருக்கும் இந்தக் காலத்தில் துயர் துடைக்கும் ஒரு அரசனாக நீதியரசர் விக்னேஸ்வரன் விளங்குகிறார் என்றும் சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் சொர்ணராஜா மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *