முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆப்கானிஸ்தானில் அரசு பணியகம் ஒன்றை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுத் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

753

ஆப்கானிஸ்தானில் அரசு பணியத்தை இன்று முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படைக்கும் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள Jalalabad என்ற இடத்தில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம் இயங்கி வருகிற நிலையில், இதற்கு வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது குறித்த பணியத்தின் வெளியில் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் சிலர் பின்னர் அந்த பணியத்தினுள் நுளைந்து, அங்கிருந்த வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்தமையால் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுவதாகவும், இதி்ல் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போது குறித்த அரசுப் பணியகம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *