முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் – நேபாள பிரதமர்

220

இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சையான கருத்தை  வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார்.

இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு  நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, இந்தியாவிடம் இருந்து அப்பகுதிகள் மீட்கப்படும் என்று மீண்டும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *