முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம் கண்டுள்ள நிலையில், 77 குற்றவாளிகள் கால்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

729

ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் கால்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று சனிக்கிழமை ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன.

அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 17,000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

போட்டியை காண்பதற்கு ஏராளமான இரசிகர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளதனால் ஒரு இலட்சம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே ஆசிய விளையாட்டு போட்டிகளை இடையூரின்றி முன்னெடுப்பதற்காக பல குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என்று Amnesty எனப்படும் அனைத்துலக மன்னிப்புச் சபை சாடியுள்ளது.

கடந்த சனவரி மாதத்திலிருந்து இதுவரையில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *