முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரொரன்ரோவைச் சேர்ந்த தொண்டூழியர்கள் கரீபியல் தீவுப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

1089

ரொரன்ரோவைத் தளமாக கொண்ட “குளோபல்மெடிக்” எனப்படும் தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த இவர்கள், நேற்று காலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென் மார்டின் தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற சண்விங் விமானத்தில் பயணித்த இவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதுடன், முக்கியமாக அவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.

தங்களுடன் சுமார் 1,500 சுகாதார பராமரிப்பு பொதிகளையும் எடுத்துச் சென்றுள்ள அவர்கள், அதனை அங்குள்ள மக்களுக்கு வினியோகிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புயல் காரணமாக அங்குள்ள நீர் பெரிதும் மாசடைந்திருக்கும் என்பதனால், அங்குள்ள நீர் வினியோக பகுதிகளில் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு பொறிமுறைகளை பொருத்தவுள்ள அவர்கள், ஏனைய இடங்களுக்கு நீர் சுத்திகரிப்பு மாத்திரைகளை வழங்கி மக்கள் சுத்தமான குடிநீரை பெறுவதை உறுதிப்படுத்தவுள்ளனர்.

குறித்த இந்த கனேடிய உதவிக்குழு சென்றுள்ள சென் மார்டின் மற்றும் பார்புடா பகுதிகளில் புயலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளதாகவும், அங்குள்ள வீடுகள் கட்டிடங்களில் சுமார் 90 சதவீதமானவை சேதமடைந்து அழிவடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இர்மா மற்றும் ஜோஷ் புயலால் பாதிக்கப்பட்ட 296 கனேடியர்கள் கனேடிய அரசாங்கத்திடம் உதவி நாடியுள்ளதாக கனேடிய வெளியுறவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *