முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் இரா சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

473

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இன்று இலங்கை சென்றுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேக்கும், இரா சம்பந்தனுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.

இதன்போது, ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எதிர்பார்க்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் தெரிவித்துள்ளார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய வெளியுறவுச் செயலாளருக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படவேண்டும் எனவும், அத்துடன் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியமாகும் என்று கூறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே தாங்கள் தீர்வொன்றினை எதிர்பார்ப்பதாகவும், நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும் என்றும் என்றும் இந்திய பிரதானிகளிடம் இரா சம்பந்தன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து தாமே நிர்ணயித்து முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களையும் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக, வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் இரா சம்பந்தன்் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்ததாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங், இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *