முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தகதியில் உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

627

இலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்று, இலங்கைக்கான தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ், கடந்த யூன் 28ஆம் நாள் வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனட் குழுவின் நேர்முகத் தேர்வுக்காக முன்னிலையானார்.

அப்போது உரையாற்றிய அவர், 2015இல் இலங்கை வாக்காளர்கள், ஊழல், முரண்பாடு, அடக்குமுறைகளை நிராகரித்து, மறுசீரமைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்த போதிலும், இலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் வலியைத் தரக் கூடியதாக இருந்ததுடன், இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான பிளவுகளை சீரமைக்கும் பணிகள் இன்னமும் முழுமையடையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவம் அவர் கூறியுள்ளார்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பரந்துபட்ட பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இலங்கையும், மாலைதீவும் முக்கியமானவை எனவும், ஹோர்மூஸ் நீரிணையையும், மலாக்கா நீரிணையையும் இணைக்கும் முக்கியமான கப்பல் பாதையில் இந்த இரண்டு நாடுகளும் அமைந்திருக்கின்றன எனவும், இந்த வழியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் தனது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நீதியை நிலைநாட்டுவது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள், அமைதியான, செழிப்பான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *