முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

1032

இலங்கையில் அரசு பெட்ரோலிய துறை பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போரட்டத்தையடுத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுஇது தொடர்பான அரசு ஆணை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கட்டளையின் பேரில் அவரது செயலாளர் ஒஸ்ரின் ஃபெர்ணான்டோ இந்த அரசாணையை வெளிந்த அரசாணையில், பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் மற்றும் வாயு பொருட்களை வழங்குதல், விநியோகம் செய்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகங்களிலுள்ள கொள்கலன்களிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருட்களை வெளியேற்றுதல், எடுத்து செல்லல், விநியோகம் உள்ளிட்ட பணிகளும் இதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பணிக்கு திரும்பாதவர்கள் தங்கள் பணிகளை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசு பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் 2வது நாளாகவும் தொடர்கிறது.
எரிபொருள் விநியோக பணிகளுக்கு முப்படையினர் உதவி
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதையடுத்து நள்ளிரவு நேரம் கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலையின் பிரதான நுழைவாயிலை போலீஸார் திறக்க சென்றிருந்த வேளை அங்கு அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது. ராணுவம் உதவிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளேயிருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
குவைத்தில் நிர்க்கதியாக தவித்த இலங்கை பெண்களில் 51 பேர் நாடு திரும்பினர்
ஆள் கடத்தல் குற்றச்சாட்டு: இலங்கையில் முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை
யாழ் நல்லூர் துப்பாக்கிச்சூடு: தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் போலிஸாரிடம் சரண்
எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுதையடுத்து எரிபொருள் விநியோக பணிகளுக்கு முப்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.
ராணுவ பாதுகாப்பு
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய தொகுதிக்கு போலீஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெட்ரோல் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
எரிபொருள் களஞ்சிய சாலைகளிலிருந்து வவுசர்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை ராணுவ உதவியுடன் எரிபொருள் விநியோகம் கொலன்னாவ பிரதான களஞ்சியத்திலிருந்து ஆரம்பமான வேளை பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த இடத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை முறிடிக்கும் வகையில் கலகம் அடக்கும் போலீஸார் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான நுழைவாயில் முன்பாக எரிபொருள் வவுசர்கள் நிறுத்தப்பட்டு டயர்களிலிருந்து காற்று வெளியேற்றப்பட்டு தமது பணியாளர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புறக்கணிப்பை கைவிடுங்கள் – சிறிசேன கோரிக்கை
பணி புறக்கணிப்பில் ஈடுபடாத பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எரிபொருள் விநியோக பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக ராணுவ ஊடகப்பிரிவு கூறுகின்றது.
யிட்டுள்ளார்.ள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *