முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலாவும் இணையத் தொடர்புக்காக கனடாவில் அதிக அளவு கட்டணம்

1293

“mobile data” எனப்படும் உலாவும் இணையத் தொடர்புகளுக்காக, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவில் அதிக அளவு கட்டணம் அறவிடப்படுவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன.

அந்த வகையில் கனடாவில் உள்ள உலாவும் இணைய வழங்குனர்கள், ஒவ்வொரு ஜிகா பைட்டுக்கும் பெற்றுக் கொள்ளும் வருமானமானது பெருமளவில் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரபலமான 32 நாடுகள் மத்தியில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ள தொலைதொடர்பு ஆய்வு நிறுவனம் ஒன்று, கனடாவில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இணையச் சேவையின் அளவில் கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், கட்டண அளவு தடையற்றுக் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு குறைந்த அளவு உலாவும் இணையப் பாவனைக்காக கூடுதல் கட்டணங்களை அறவிடும் நாடுகளாக கனடா, பெல்ஜியம், யேர்மனி, செக் குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகளை வகைப்படுத்தியுள்ள அந்த ஆய்வு நிறுவனம், இவ்வாறான நாடுகளில் உள்ள பயணாளிகள் மிகவும் குறைந்த அளவிலான உலாவும் இணையச் சேவையினையே பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுக்கு மாறாக தடையற்ற அளவிலான உலாவும் இணையச் சேவைகளையும், அதிக அளவிலான இணைய வசதிகளையும் வழங்கும் நாடுகளில், அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகமாக உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஃபின்லாந்தில் சுமார் அரைப் பங்கு பயனாளிகள் தடையற்ற அளவிலான உலாவும் இணையச் சேவையினை மிகக் குறைந்த செலவில் பெற்று வருவதாகவும், சாதாரணமான உலாவும் இணையப் பாவனையும் மிக அதிக அளவிலேயே உள்ளதாகவும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு உலக அளவிலேயே அதிக அளவிலான உலாவும் இணையச் சேவையினை வழங்கும் நிறுவனமாக ஃபின்லாந்தின் DNA எனப்படும் நிறுவனமே இனங்காணப்பட்டுள்ளதாகவும், அது தனது வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக ஒவ்வொரு மாதமும் 9.9 ஜிகா பைட் அளவிலான இணையத் தகவல்களை வழங்குவதாகவும் அந்த ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கனடாவில் உலாவும் இணையச் சேவைகளுக்கான கட்டணங்கள் போட்டித் தன்மை மிக்கதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள கனடாவின் தொடர்பாடல் துறை, ஒரு மாதத்திற்கு 2இலிருந்து 5 ஜிகா பைட் வரையிலான சேவைக்கு அமெரிக்காவில் சுமார் 50 டொலர்களும், யப்பானில் சுமார் 52 டொலர்களும் அறவிடப்படும் நிலையில், கனடாவில் சுமார் 47 டொலர்கள் மட்டுமே அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *