முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11கடத்தல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு

269

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டனர்.  

கொரோனா நிலைமை காரணமாக கடந்த  நாட்களில் குறித்த வழக்கு விசாரணை தடைப்பட்டிருந்த நிலையிலேயே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கவும், அது தொடர்பில் பிரதிவாதிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கவும் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க  உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும், ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்வநாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்சி­லாகே ஜோன் ரீட், அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் இவ்வாறு கடத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்து.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *