முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கு போட்டியிடவுள்ளதனை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) உறுதிப்படுத்தியுள்ளார்.

1787

முன்னாள் கனேடிய பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளும், ரொரன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடவுள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பழமைவாதக் கட்சியின் தலைவராக இருந்த பற்றிக் பிரவுன், திடீரென பதவி விலகியதை அடுத்து, கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) அந்த பதவிக்காக போட்டியிடுவார் என்று கடந்த ஒரு வாரமாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவரே அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை ரொரன்ரோ அரங்கம் ஒன்றில் இடம்பெற்ற ஹொக்கி விளையாட்டில் அவரது இரண்டு பிள்ளைகள் விளையாடிய நிலையில், அதனைப் பார்க்கச் சென்றிருந்த வேளையில், ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், ஒன்ராறியோவின் அரசியலில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு தான் தயாராகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோவில் கடந்த 15 ஆண்டுகளாக லிபரல் அரசின் ஆட்சியே நடைபெற்று வரும் நிலையில், அதில் ஒரு புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

லிபரல் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும், அவர்களுக்கு புதியதாக ஒரு அரசாங்கம் தேவைப்படுவதாகவும், எனவே அந்த மாற்றத்தில் தனது பெயரை இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தான் தயாராகி விட்டதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.

தம்முடைய நலனில் அக்கறை செலுத்தக் கூடிய அரசாங்கம் ஒன்றே மக்களுக்கு தேவைப்படுவதாகவும், அதனை மக்களுக்கு வழங்க தான் தயாராகி விட்டதாகவும், அதற்கேற்ற வகையிலான தலைமைத்துவத்தினை கட்சிக்கும் வழங்குவதற்கு உரியவராக தான் இருப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு்ளளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *