முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவில் பாரிய வாகனப் பேரணி

466

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கனடாவில் இன்று பாரிய வாகனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, இந்த வாகனப் பேரணியை கனடிய தமிழர் தேசிய அவையினர் நெறிப்படுத்தியிருந்தனர்.  பிராம்ப்டனில் நகர மண்டபத்திலிருந்தும் ஸ்கார்பரோவில் மார்க்கம் ஸ்டீல் சந்திப்பிலிருந்தும் இருந்தும், நண்பகல் 12 மணிக்கு இந்த பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு பேரணிகளும் யங் அன்ட் செப்பேட் சந்திப்பில் ஒன்றிணைந்து சென்று, யுனிவர்சிற்றி அவெனியூ வழியாக, குயின்ஸ்பார்க்கை சென்றடைந்தன. ஒன்ராறியோ சட்டமன்றத்தை வாகன பேரணி வலம் வந்து தமது கண்டனதை பதிவு செய்ததுடன் பேரணி நிறைவுக்கு வந்தது.

நண்பகல் தொடங்கிய வாகனப் பேரணியில் இடம்பெற்ற வாகனங்கள், மாலை 4.30 மணிக்குப் பின்னரும்,  குயின்ஸ்பார்க்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

கடும் நெரிசல் காரணமாக, இந்த வாகனங்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த கண்டன வாகனப் பேரணியில் 4000 இற்கும் மேற்பட்ட மகிழுந்துகளில் கனடிய தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்று, சிறிலங்கா அரசுக்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

வாகனங்களில் தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததுடன், சிறிலங்கா அரசைக் கண்டிக்கும் பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

இந்த மாபெரும் வாகனப் பேரணி தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பணியில் கனடிய முன்னணி ஊடகங்களின் செய்தியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதேவேளை, இந்த கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும், நினைவுத் தூபி இடிக்கப்பட்ட சிறிலங்கா அரசின் செயலைக் கண்டித்தும், பிராம்டன் நகர முதல்வர் பற்றிக் பிறவுண் உள்ளிட்ட கனடாவின் அரசியல் பிரமுகர்களும், ஊடகப் பிரதிநிதிகளும் கீச்சகப் பதிவுகளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *