முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? இதோ சூப்பரான டிப்ஸ்

1573

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிரியம், ஆனால் அவர்களை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான ஒன்று.

இதனால் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளும் பெற்றோர்கள் இன்று ஏராளம்.

  • குழந்தைகளுக்கு திகட்டாமல் இருப்பதற்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காமல், ஒரு குறிப்பிட்ட முறையான இடைவெளிகள் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு உணவு உண்ணும் நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, குழந்தைகள் சாப்பிடும் போது அவசரப்படுத்தாமல், அவர்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்ககூடாது.
  • இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, குழந்தைகளை சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.
  • பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இவற்றை கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
  • ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை குடிக்க வேண்டும் என்பதால், வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பழச்சாறாகவோ, பானமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்க வேண்டும்.
  • காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ செய்து கொடுக்க வெண்டும். இதனால் குழந்தைகள் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
  • பழங்கள் சாப்பிட மறுத்தால், பலவகையான பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன், பால் மற்றும் தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும், குழந்தைகளும் சாப்பிடுவார்கள்.
  • அனைவரும் உட்கொள்ளும் காபி,டீ கொடுப்பதை தவிர்த்து, காலை டிபன்களான தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி போன்றவற்றின் வடிவங்களை மாற்றி குழந்தைகள் வியக்கும்படி செய்து கொடுத்தால், மகிழ்ச்சியோடு குழந்தைகள் சாப்பிடுவார்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *