முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

குழாய் மூலமான குடி நீரில் ஃப்ளோரைட் கலப்பதா! இல்லையா!வின்சர் ஒன்டாரியோ நகர முதல்வர்

541

குழாய் நீரில் ஃப்ளோரைட்) கலப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குழாய் மூலமான குடி நீரில் ஃப்ளோரைட்) கலப்பதா இல்லையா என்பதனை நகர நிர்வாகம் தீர்மானிக்கக் கூடாது எனவும், அதனை மாகாண அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் எனவும் வின்சர் ஒன்டாரியோ நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வின்சரில் குழாய் நீரில் ஃப்ளோரைட் கலப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் சிறுமியருக்கு அதிகளவில் பற்களில் ஏற்படும் உயஎவைநைள எனப்படும் பல் சொத்தை இவ்வாறு ஃப்ளோரைட்டை கலந்த நீரால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பல் சொத்தையாவதனை தடுப்பதற்கும் ஈறுகளை பலப்படுத்துவதற்கும் ஃப்ளோரைட் என்னும் இரசாயனம் முக்கிய பங்களிப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பற்பசைகளில் ஃப்ளோரைட் காணப்படுவதாகவும், குடி நீரில் இரசாயனம் கலப்பது ஆபத்தானது எனவும் சில தரப்பினர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *