முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இணக்கப்பாடு

193

தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியன தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *