முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக

377

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.

அதே போன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல தரப்பினர்களும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்று இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருப்பதாவது,

மண் மீட்புக்காக போராடிய நாம் மணல் கொள்ளையை அனுமதிக்க முடியாது எனவே வடக்கின் மண் வளம் அழிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னபாக இன்று புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அழிக்காதே அழிக்காதே மண் வளத்தை அழிக்காதே”, ” கண்ணீரில் நனைந்த எமது மண் கடல் நீரில் மூழ்கிப் போவதா”, “அபிவிருத்தி என்ற பெயரில் எமது வளத்தை சூறையாடாதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *