முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சந்தைகளில் எழுமாறாக பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் இரசாயனம் இல்லை

299

சந்தைகளில் எழுமாறாக பெறப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் இல்லை என தெரியவந்துள்ளது.

கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார். நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த மாதிரிகள் பெறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அப்ஃலாடொக்ஸின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினரால் உறுதிபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகை, சுங்கத்திணைக்களத்தால், அவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்களின் களஞ்சியசாலைகளுக்கு விடுவிக்கப்பட்டதாக அண்மையில் எமது செய்தி பிரிவு வெளிப்படுத்தியிருந்தது.
 
அதன் பின்னர் இந்த விடயம் சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் தொகை சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என விடயத்திற்கு பொறுப்பானவர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த பிண்னணியில் தங்கொட்டுவ பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைக்கு பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கிகளில் அப்ஃலாடொக்ஸின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக உறுதியானது.

மூன்று நிறுவனங்களினால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொகையில் அப்ஃலாடொக்ஸின் எனப்படும் புற்றுநோயை ஏற்படுத்த கூடிய இரசாயனம் அடங்கியதாக இலங்கை தரநிர்ணய நிறுவகம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகம் உள்ளிட்ட மூன்று தரப்புகளின் ஊடாக அண்மையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு நிறுவனம், தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்காக துறைமுக முனையத்திற்கு அனுப்பியுள்ள போதிலும் அவை  இதுவரையில் கப்பலுக்கு ஏற்றப்படவில்லை.

எவ்வாறாயினும், ஏனைய நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு அவை தொடர்ந்தும் களஞ்சியசாலைகளில் முத்திரையிடப்பட்டுள்ளன.
 
புற்றுநோயை ஏற்படுத்த கூடிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக உதவி காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட தரப்பினர் அடங்கிய 10 பேர் கொண்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டது. இதற்கமைய குறித்த விசாரணை குழுவினால் தற்போது சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனங்களிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *