முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சவூதி அரேபியாவில் இருந்து நிர்க்கதியாக இருந்த பெண்ணுக்கு கனடா அடைக்கலம்

586

சவூதி அரேபியாவில் உள்ள தனது குடும்பத்தாரிடம் இருந்து தப்பித்து வெளியேறி, தாய்லர்நதின் தலைநகர் பாக்கொக்கின் வானூரதி நிலையத்தில் நிர்க்கதியாக இருந்த சவூதிப் பெண்ணு்ககு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது.

றஹாஃப் மொஹமட் அல் குனுன்(ahaf Mohammed al-Qunun) எனப்படும் குறித்த அநத 18 வயது பெண், பாங்கொக் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க முயற்சித்த நிலையில், அவரை குவைத்தில் உள்ள அவரது குடும்பத்தாருடன் சென்று சேருமாறு கோரப்பட்ட நிலையில், அவர் அதனை நிராகரித்திருந்தார்.

அவரது சகோதரரும் தந்தையாரும் பாங்கொக் சென்று, அவரைத் தம்முடன் வருமாறு கோரிய போதிலும், தன்னைக் கொடுமைக்கு உள்ளாக்கும் தன் குடும்பத்தாரிடம் தான் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று கூறிய அந்த பெண், வானூர்தி நிலைய பயணிகள் விடுதியில் இருந்து வெளியேற மறுத்த சம்பவம் அண்மைய நாட்களில் அனைத்துலக அளவிலான கவனத்தை ஈர்த்து்ளளமை குறிப்பிடத்தக்கது.

தான் இஸ்லாம் மதத்தைத் துறந்து விடடதாகவும், இவ்வாறு செய்வது சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில், தான் அங்கு திரும்பிச் செல்லமுடியாது என்றும் அவர் கூறியதை அடுத்து, அவரை புகலிடக் கோரிக்கையாளராக ஏற்றுக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான முகவராலயமும் தெரிவித்திருந்தது.

இவ்வ்வாற நிலையில் குறித்த இநத விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, கனடா எப்போதுமே உலகம் முழுவதிலும்மனித உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் செயற்படுவது என்பதில் தெளிவாக இருப்பதாகவும், தற்போது ஐ.நா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் குறித்த அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்து்ளளார்.

கனடாவின் இந்த முடிவினை பெரிதும் வரவேற்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயமும் தெரிவித்து்ளளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *