முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவில் ஒரேநாளில் 700பேருக்கு கொரோனா தொற்று ; இருவர் பலி

212

சிறிலங்காவில், மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று மட்டும் 707 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில்  237 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28ஆயிரத்து 580ஆக அதிகரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *