சீனாவில் கொரோனா வைரஸ் கிருமி ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தியான்ஜின் (Tianjin) மாநகராட்சியில் உள்ள ஐஸ் கிறீம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிறீமில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், உடனடியாக அந்த ஐஸ் கிறீம் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை பணியாளர்கள் மூலமே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.