முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜோ பைடனுடன் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் உரையாடல்

186

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.

குறித்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற பின்பு ஜோ பைடன் தொலைபேசியில் பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜோன்சன்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனுடன் பேசிய பிறகு, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது வெளியிட்ட கீச்சகப் பதிவில், “ ஜோ பைடனுடன்  தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது.  நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள தனித்துவமான நட்பை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்தை போரிஸ் ஜோன்சன் வரவேற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *