முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜோ பைடன் நிருவாகம் எந்த வாக்குறுதிகளையும் பின்வாங்கவில்லை;கிர்ஸ்டன் ஹில்மேன்

272

ஜோ பைடன் தலைமையிலான நிருவாகம் கனடாவுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் பின்வாங்கவில்லை என்று அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேன் (Kirsten Hillman) தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு 20மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் கனடிய தொலைக்காட்சிக்கு அளித்துள்ள விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் முதற்கட்டமாக 1.5மில்லியன் தடுப்பூசிகள் கனடாவுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அமெரிக்காவில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *