முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும்.

1311

தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் நாள் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியே நாட்டின் அமைதியைக் குழப்பியுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செய்லாளரான கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்  துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் எழுக தமிழ் பேரணியை அடுத்து, தென்னிலங்கையில் எழுக சிங்களம் என்று பேரணி நடாத்தப்பட வேண்டும் என்று பெங்கமுவே நாலக்க தேரர் போன்ற சிங்கள மதத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனுராதபுரம் சிறி முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற குண்டர்கள் அங்கிருந்த ஒருவரை வாளால் வெட்டியதுடன், ஆலயத்தின் நாகதம்பிரான் சிலையினையும் உடைத்திருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவருவதாகவும் துரைராஜசிங்கம கூறியுள்ளார்.

அமைதியைக் குழப்புவதென்பது இலகுவான விடையம் என்றும், ஒரு கல்லெறிந்தால் போதும் அந்த அமைதியினைக் குழப்பிவிடலாம் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, சிங்கள மேலாதிக்கம் நீக்கப்பட்டு, தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தும் வகையிலான தன்னாட்சி அதிகாரத்தை உள்ளடக்கிய அதிகாரப் பரவலாக்கலே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்ற தமிழ் மக்களினதும் நியாயமான கோரிக்கைகளை  வெளிப்படையான கூறமுடியாதவர்கள் மொளனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *