முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தயாகத் தமிழர்களுக்கு எரிக் சொல்ஹெய்மின் ஐந்தம்ச ஆலோசனைகள்

488

சிறிலங்காவில் எண்ணிக்கையில் சிறுபான்மை தேசிய இனத்தவர்களாக இருக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியயோர் தமது நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு காந்திய வழியான சத்தீவிக போராட்டங்களை கூட்டிணைந்து தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது மத்தியஸ்தராக செயற்பட்டவரும், நோர்வே நாட்டின் இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இனப்பிரச்சினை நீடித்திருக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும், உலக நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கரிசனையுடன் ஈடுபட்டவன் என்ற வகையில் தற்போதைய நிலைமைகளை மையப்படுத்தி ஐந்தம்ச ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்று கருதுகின்றேன்.

சிறிலங்காவில் இனப்பிரச்சினை நீடித்திருக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும், உலக நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கரிசனையுடன் ஈடுபட்டவன் என்ற வகையில் தற்போதைய நிலைமைகளை மையப்படுத்தி ஐந்தம்ச ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்று கருதுகின்றேன்.

அத்துடன் தமிழர்கள் ஒற்றுமையாக இருத்தல், சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்தல், சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வை இறுதி செய்தல், சிறுபான்மை இனங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்தல், பூகோள ரீதியாக இந்தியாவை கையாளுதல் ஆகிய ஐந்து விடயப்பில் தமது யோசனைகளையும் அவர் முன்வைத்திருந்தார்.

லண்டனில் உள்ள தமிழ் தகவல் நடுவத்தினரின் ஏற்பாட்டில் 72ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தினம் நேற்று நடைபெற்றிருந்தது.

மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக எரிக்சொல்ஹெய்ம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காஅரசாங்கத்தினை கட்டுப்படுத்தாது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு மட்டுமே உதவ முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவையாவன,

• அடுத்ததாக சிறிலங்காத் தமிழர்கள் தமக்கான அரசியல் நிலைப்பாடு தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள். தமிழர்கள் தமது மொழி, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் அதேநேரம், தமக்கான தீர்வு என்ன என்பது தொடர்பாக திட்டவட்டமானதொரு வெளிப்பாடு அவசியமாகின்றது. அவர்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான அரசியல் தீர்வானது சமஷ்டி அடிப்படையிலானதாக இருக்க முடியும். அதற்கு சுயநிர்ணயம், சுயாட்சியாட்சி, ஐக்கிய சிறிலங்காவுக்குள் சமஷ்டி என்று எவ்விதமான பெயரையும் வழங்கமுடியும். ஆனால் அது எந்த வடிவிலானது என்பது பற்றிய தீர்க்கமான முடிவெடுத்து அதனை நோக்கி நகருவதற்கும், சர்வதேசத்தின் ஆதரவினைப் பெறுவதற்கும் விளைய முடியும். அவர்களின் அதியுச்சமான இறுதியான கோரிக்கையாக அதுவே காணப்பட வேண்டும். அது ஒரே குரலில் எழுப்பபட வேண்டும். சர்வதேசத்தில் சுவிஸ்சர்லாந்து, கனடா, டென்மார்க் இவ்வாறு பலநாடுகள் சமஷ்டி அடிப்படையிலானவை. அதில் எதுபொருத்தமானது என்பதை தெரிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே உள்ளது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைப்பதால் பயனில்லை. ஏனென்றால் எந்தவொரு உலக நாடும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது தெளிவான விடயமாகும்.

• சிறிலங்காவில், விடுதலைப்புலிகளால் ஆயுதரீதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வன்முறையின் வெளிப்பாடுள் அனைவரும் அறிந்த ஒரு விடயம். முப்பது ஆண்டுகளாக அது நீடித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய உலக நியதியில் ஆயுதப்போராட்டம் என்பது இனி நினைத்துப்பார்க்கவே முடியாத தொன்றாகும். ஆகவே உரிமைகளை வென்றெடுப்பதற்காக சிறிலங்காவிலும் சரி அதற்கு வெளியிலும் சரி மகாத்மா காந்தியின் வழியில் அஹிம்சை ரிதியான சாத்வீக போராட்டங்களையே முன்னெடுப்பதே பொருத்தமானாக இருக்கும். இந்தப்போராட்டங்கள் மக்களை அணிதிரட்டிய பேரணிகளாகவோ, உண்ணாவிரதப் போராட்டங்களாகவோ உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கவனயீர்ப்பினைச் செய்வதாக அமையலாம்.

• தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். அவர்கள் தம்மை விடவும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருடன் இணைந்து உரிமைகளுக்காக சாத்வீக ரீதியில் குரல் எழுப்ப முடியும். அவ்வாறு செயற்படுவதை அதிகளவான சிங்களவர்கள், பௌத்த தலைவர்களும் விரும்பமாட்டார்கள். அத்துடன் தமிழர்கள் பலமாக முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தொய்வு நிலையற்ற கூட்டுப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகின்றது.

• அடுத்து பூகோள அரசியல் மிக முக்கியமானது. பூகோள அரசியல் மாற்றங்கள் தொடர்பில் தமிழர்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்த விடயத்தில் மூலோபாயங்களுடன் புத்திசாதுரியமான கையாளுகை அவசியமாகின்றது. உலகநாடுகளைப் பொறுத்தவரை இலங்கை கேந்திர ஸ்தானத்தில் இருந்தாலும் முக்கிய புள்ளியல்ல. ஆகவே தமது நலன்கள் சார்ந்த விடயங்களையே முன்னிலைப்படுத்துவார்கள். ஐ.நா.வில் தமிழர்களின் பிரச்சினை பேசப்பட்டாலும் அது சர்வதேச தரப்பிற்கு முக்கியத்துவமானதாக இருக்காது. ஆகவே மிக இலகுவாக பூகோள அரசியலை தமிழர்கள் கையாள்வதாக இருந்தால் ‘இந்தியாவுக்கே முதலிடம்’ என்ற நிலைப்பாட்டை தெளிவாக எடுக்க வேண்டும். பிரித்தானியாவாக இருக்கலாம், நோர்வேயாக இருக்கலாம் எவருடைய தலையீடுகளும் உள்ளக நிலைமகளில் மாற்றங்களை ஏற்படுத்தார். இந்தியாவே அந்த விடயங்களில் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கவல்லது. அதேநேரம் சிறிலங்கா தமிழர் விடயத்தில் இந்தியாவுக்கும் முக்கிய வகிபாகம் உள்ளது. ஏனென்றால் தமிழர்கள் இரத்தம் சிந்திய காலத்தில் கப்பல் அனுப்பியது முதல் போராட்டங்கள், அரசியல் நகர்வுகளில் செல்வாக்கினை இந்தியாவே தொடர்ச்சியாக செலுத்தி வந்துள்ளது. 1988இல் பிரபாகரன் உள்ளிட்ட பல விடுதலை அமைப்புக்களுக்கு ஆயுதங்களையும் இந்தியாவே வழங்கியது. தமிழகத்தின் ஊடாக பல ஒத்துழைப்புக்களை வழங்கியது. ஆமைதிப்படையை அனுப்பியது. ஆதனைத்தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்காக தலையீடுகளைச் செய்துள்ளது. இந்தியாவும் சிறிலங்காவும் சகோதரத்துவ நாடுகள். அமெரிக்காவோ சீனாவோ, ஐரோப்பியாவோ யாராக இருந்தாலும் இந்தியாவுக்கு அடுத்தே சிறிலங்கா விடயத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் இருக்கும் நிலையே உள்ளது. சீனாவை ராஜபக்ஷ சகோதரர்கள் இலகுவாக கையாளுகின்றார்கள். சீனா பொருளாதார ரீதியான செல்வாக்கைச் செலுத்துகின்றது. ஆனால் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சீனா செல்வாக்குச் செலுத்தாது. போரை நிறைவுக்கு கொண்டுவருவதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் சிறிலங்காவுக்கு உதவியது யதார்த்தம். அதுகூட இந்தியாவை தவறாக கையாண்டமையால் தான் நிகழந்தது. ஆகவே தமிழர்கள் இந்தியாவை மிகச்சரியாக கையாள்வதே முக்கிய செயற்றிட்டமாக இருக்க வேண்டும்.
இவையே எனது ஐந்தம்ச யோனைகளாகும்.

இதனையடுத்து கேள்வி நேரத்தின்போது சிறிலங்காவின் இறுதிப்போரில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்று வினா எழுப்பப்பட்டபோது, ‘இனப்படுகொலை’ என்பதை விட ‘பாரிய மனிதப்படுகொலை’ என்று தான் அதனை அழைக்க விரும்புகின்றேன் என்றார்.

அதேநேரம் போரில் இடம்பெற்ற குற்றங்களை விசாரணை செய்வதற்கு உள்ளக்பொறிமுறை போதுமானது என்று சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோது, சிறிலங்காவின் சட்ட ஏற்பாடுகள் உள்ளகப் பொறிமுறை போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு போதுமானது அல்ல. ஆகவே சர்வதேசப் பங்களிப்புடனான பொறிமுறையே அவசியம் என்றார்.

அவ்வாறன சர்வதேசப்பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றபோது விபரங்களைத் திரட்டுதல், தொகுத்தல், ஆராய்தல் போன்றவற்றில் தமிழ்த் தரப்புக்கள் அதிக கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றும் கூறினார்.


இந்த நிகழ்வில் எலியட் கோல்பேர்ண், டேவிட் வோலி, டயிடர் மக் கோனெல், நாடாளுளுமன்ற உறுப்பினர், எட்டேவி ஆகியோரும் கருத்துக்களை வெளியிட்டதோடு மனித உரிமைச் செயல்பாட்டாளர்களான கலாநிதி றேசெல் சோகோ, பில் மில்லர், இஃபால் ஆகியோருக்கு மனித உரிமை விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *